Paristamil Navigation Paristamil advert login

'துருவ நட்சத்திரம்' டிசம்பர் 1ல் வெளியாகுமா ?

'துருவ நட்சத்திரம்' டிசம்பர் 1ல் வெளியாகுமா ?

25 கார்த்திகை 2023 சனி 16:13 | பார்வைகள் : 3657


கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரித்து வர்மா மற்றும் பலர் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படம் நேற்று வெளியாக இருந்த நிலையில், வெளியாகவில்லை. அதற்காக ரசிகர்களிடம் தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார் இயக்குனர் கவுதம்.

அவருடைய முந்தைய படத் தயாரிப்புகளில் ஏற்பட்ட நிதிச் சிக்கல்களை அவர் தீர்க்காமல் போனதால்தான் இப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனிடையே, படத்தை அடுத்த வாரம் டிசம்பர் 1ம் தேதி எப்படியாவது வெளியிட வேண்டும் என அவர் முயற்சித்து வருகிறாராம். பல சிக்கல்களைச் சந்தித்து அவற்றைத் தீர்த்து பட வெளியீடு வரை வந்து நின்று போனது கவுதம் ரசிகர்களுக்கும், விக்ரம் ரசிகர்களுக்கும் வருத்தத்தைத் தந்துள்ளது.

அடுத்த வாரம் சில படங்களின் வெளியீடுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் 'துருவ நட்சத்திரம்' படத்திற்கு எப்படியும் தியேட்டர்களைப் பெற்றுவிட முடியும் என நினைக்கிறார்களாம். கவுதம் நேற்று சொன்னது போல சில நாட்களில் பிரச்சனையைத் தீர்த்துவிடுவாரா என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவரது நலம் விரும்பிகள் யாராவது அவருக்குக் கை கொடுத்து தூக்கிவிட மாட்டார்களா என்றும் சிலர் எதிர்பார்க்கிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்