ஆவணங்கள் அற்ற குடியேற்றவாதிகளுக்கு சட்டவிரோதமாக உதவிய காவல்துறை வீரர் 88,000 ரொக்கப்பணத்துடன் கைது!

25 கார்த்திகை 2023 சனி 17:54 | பார்வைகள் : 7465
ஆவணங்கள் அற்ற குடியேற்றவாதிகளுக்கு பணம் வாங்கிக்கொண்டு சட்டவிரோத செயலில் ஈடுபட்ட காவல்துறை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வங்கிக்கணக்கில் இருந்து 88,000 யூரோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
49 வயதுடைய Armand எனும் காவல்துறை வீரரே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த சில வருடங்களாக பிரான்சில் குடியேறியுள்ள ஆவணங்கள் அற்ற நபர்களுக்கு பல்வேறு வகைகளில் சட்டத்தை மீறி உதவிகள் செய்துள்ளார். இதற்காக அவர் 20 யூரோக்களில் இருந்து 200 யூரோக்கள் வரை இலஞ்சப்பணம் பெற்றுள்ளார். அறுபதுக்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்றவாதிகளுக்கு அவர் உதவி செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூன் (Cameroon) இனை பூர்வீகமாக கொண்ட குறித்த காவல்துறை வீரர்., கடந்த 27 வருடங்களாக பிரான்சில் வசிகின்றார். பிரெஞ்சு குடியுரிமை கொண்ட அவர், இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்தார்.
அவரது வங்கியில், கணக்கில் வராத 88,000 யூரோக்கள் ரொக்கப்பணம் இருந்து அவை முடக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அவர் 15,000 யூரோக்கள் இலஞ்சமாக பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.