Paristamil Navigation Paristamil advert login

லியோனின் முன்னாள் நகரபிதா Gérard Collomb மரணம்! - ஜனாதிபதி மக்ரோனின் அரசியல் வரலாற்றை உருவாக்கியவர்!!

லியோனின் முன்னாள் நகரபிதா Gérard Collomb மரணம்! - ஜனாதிபதி மக்ரோனின் அரசியல் வரலாற்றை உருவாக்கியவர்!!

26 கார்த்திகை 2023 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 3237


லியோன் நகரின் முன்னாள் நகரபிதா Gérard Collomb, தனது 76 ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை மரணமடைந்துள்ளார்.

அரசியலில் பெரும் சேவை மனப்பாங்கும், ஊழியர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றியவருமாக இவரை அனைவரும் அறிவார். ஜூன் 20, 1947 ஆம் ஆண்டில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், தனது கல்வி தகமை மற்றும் சிந்தனை திறனால் அவர் அரசியலில் பெரிதும் கவனிக்கப்பட்டவராக மாறினார்.

CGT தொழிற்சங்க ஊழியரான அவரது அப்பாவின் கடினமான வாழ்க்கையே Gérard Collomb இனது அரசியல் பார்வையை மாற்றியது.

இம்மானுவல் மக்ரோனை ‘ஜனாதிபதி’ ஆக போட்டியிட வைத்தமைக்கு முதல் அஸ்திவாரத்தினை இவரே எழுப்பினார். 2015 ஆம் ஆண்டு இம்மானுவல் மக்ரோன் பிரான்சின் பொருளாதா அமைச்சராக செயற்பட்டபோது, அவரது பொருளாதார சிந்தனைகளினால் கவர்ந்த Gérard Collomb, அவரை எலிசே மாளிகைக்காக போட்டியில் ஈடுபட வைத்தார். அதன் பின்னரே இம்மானுவல் மக்ரோன் ஜனாதிபதியானார்.

தேசம் மதிக்கும் பெரும் அரசியல் தலைவரான Gérard Collomb, வயிற்றில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக நேற்று சனிக்கிழமை அவர் மரணமடைந்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்