யாழில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த யுவதி உயிரிழப்பு

26 கார்த்திகை 2023 ஞாயிறு 06:08 | பார்வைகள் : 6105
முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பளை இத்தாவில் பகுதியை சேர்ந்த குணாளன் மதுசா (வயது 19) எனும் யுவதியே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இத்தாவில் பகுதியில் கடந்த 22ஆம் திகதி முச்சக்கர வண்டி மோதி விபத்துக்கு உள்ளானதில் படுகாயமடைந்த யுவதி, பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1