Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்ரேலியாவில் கோர விபத்து...! 4 பேர் பலி

அவுஸ்ரேலியாவில் கோர விபத்து...!  4 பேர் பலி

26 கார்த்திகை 2023 ஞாயிறு 09:55 | பார்வைகள் : 5120


அவுஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள க்ரூனாவ் இம் அல்ம்டலில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விமான விபத்தில் நான்கு பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பனிப் பொழிவுக்கு மத்தியில் மலைப்பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் சிதறி கிடப்பதை பார்த்த பிறகே தேடுதல் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சிறிய ரக விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்த இதுவரை காரணம் கண்டறியப்படாத நிலையில், அது குறித்து அவுஸ்திரேலிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேர் யார் என்ற அடையாளமும் காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்