Paristamil Navigation Paristamil advert login

வெடித்து சிதறிய உலக புகழ்பெற்ற மவுண்ட் எட்னா எரிமலை!

வெடித்து சிதறிய உலக புகழ்பெற்ற மவுண்ட் எட்னா எரிமலை!

26 கார்த்திகை 2023 ஞாயிறு 10:15 | பார்வைகள் : 6611


இத்தாலியில் மவுண்ட் எட்னா எரிமலை வெடித்து சிதறி தீ குழம்பை வெளியேற்றி வருகிறது.

இத்தாலியின் ரோம் நகரில் இருந்து 500 கி.மீ தொலைவில் சிசிலி தீவு அமைந்துள்ளது.

இந்த சிசிலி தீவில் உலக புகழ்பெற்ற மவுண்ட் எட்னா எரிமலை உள்ளது. மவுண்ட் எட்னா எரிமலை கடல் மட்டத்தில் இருந்து 3,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

மவுண்ட் எட்னா எரிமலை அடிக்கடி வெடித்து சிதறுவது வழக்கமாக இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மவுண்ட் எட்னா எரிமலை வெடித்து சிதறி தீ குழம்பை வெளியேற்றி வருகிறது.

பனி மூடிய எட்னா எரிமலை சூடான எரிமலை குழம்பை கக்கி வருவதால் ஒரே புகை மண்டலமாக அப்பகுதி மாறியுள்ளது.

மேலும் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்டுள்ள சாம்பல் கழிவுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் தீவில் கரைவது வாடிக்கையாக உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்