வீட்டுக்குள் திடீரென பாய்ந்த துப்பாக்கி சன்னம்! - ஒருவர் பலி!!
26 கார்த்திகை 2023 ஞாயிறு 11:51 | பார்வைகள் : 16092
வீடொன்றுக்குள் திடீரென நுழைந்த துப்பாக்கிச் சன்னத்தினால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று இரவு Dijon நகரில் இடம்பெற்றது.
55 வயதுடைய ஒருவர் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வீட்டின் உள்ளே முதலாவது தளத்தில் நின்றிருந்த வேளையில், திடீரென அவர் மீது துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. அவர் படுகாயமடைய, அவரது மனைவி மருத்துவக்குழுவினரை அழைத்துள்ளார்.
விரைந்து வந்த மருத்துவக்குழுவினர், காயமடைந்த நபருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தும் அது தோல்வியில் முடிந்துள்ளது. குறித்த நபர் உயிரிழந்ததாக நள்ளிரவு 1 மணி அளவில் அறிவிக்கப்பட்டார்.
துப்பாக்கி குண்டு எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், சில நிமிடங்களியேலே உண்மையை கண்டறிந்தனர்.
குறித்த வீட்டின் அருகே போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு இடையே மோதல் வெடித்ததாகவும், அதன் போது துப்பாக்கியால் சுடப்பட்டதிலேயே ஒரு குண்டு மேற்குறித்த நபரை தாக்கியதாகவும் தெரியவந்தது. விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.


























Bons Plans
Annuaire
Scan