Paristamil Navigation Paristamil advert login

மறைந்த முன்னாள் லியோன் நகரபிதாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்கிறார் ஜனாதிபதி மக்ரோன்!!

மறைந்த முன்னாள் லியோன் நகரபிதாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்கிறார் ஜனாதிபதி மக்ரோன்!!

26 கார்த்திகை 2023 ஞாயிறு 17:39 | பார்வைகள் : 3257


மறைய லியோன் நகரின் முன்னாள் நகரபிதா Gérard Collomb இன் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் லியோனுக்கு பயணமாக உள்ளார்.

நவம்பர் 29, புதன்கிழமை அவரது இறுதிச் சடங்கு லியோனில் உள்ள Saint-Jean தேவாலயத்தில் காலை 11 மணிக்கு இடம்பெற உள்ளது. அதுவரை அவரது பூதவுடல் லியோன் நகரசபைக் கட்டிடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.

இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் புதன்கிழமை லியோனுக்கு பயணிக்க உள்ளார்.

**

லியோன் மாவட்டத்தின் முன்னாள் நகரபிதா Gérard Collomb, நேற்று சனிக்கிழமை தனது 76 ஆவது வயதில் வயிற்றுப்புற்றுநோய் காரணமாக மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்