Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் மூன்றாவது நாள்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் மூன்றாவது நாள்

27 கார்த்திகை 2023 திங்கள் 01:33 | பார்வைகள் : 2321


இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் மூன்றாவது நாளை எட்டியுள்ளது.

13 இஸ்ரேலிய பணயக்கைதிகள், மூன்று தாய்லாந்து பிரஜைகள் மற்றும் ஒரு ரஷ்யர் ஆகியோர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் சிறையில் கடந்த 8 ஆண்டுகளாக வாடும் 39 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்படைப்பு என ஹமாஸ் படைகள் வாக்குறுதியை காப்பாற்றிவருகின்றது.

இந்நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் படைகளால் 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


கொடூரத்தின் உச்சமாக ஜெனின் நகரில் ஒரே இரவில் இஸ்ரேலிய படைகள் முன்னெடுத்த தாக்குதல் சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒகஸ்ட் மாதம் இரண்டு இஸ்ரேலியர்களைக் கொன்ற விவகாரத்தில் சந்தேகிக்கப்படும் பாலஸ்தீனியர் ஒருவரைப் பிடிப்பதற்காக தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேலிய இராணுவம் விளக்கமளித்துள்ளது.

இதனிடையே, கொல்லப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜெனினில் வேலைநிறுத்தத்திற்கு பாலஸ்தீனிய பிரிவுகள் அழைப்பு விடுத்துள்ளன.

பாலஸ்தீனிய போராளிகளால் இஸ்ரேல் ராணுவம் கொடிய வன்முறை சம்பவங்களை சந்தித்த பின்னர், ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக மேற்குக்கரை கிட்டத்தட்ட தினசரி மோதல்களை எதிர்கொண்டு வருகிறது.

துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக் குத்து தாக்குதல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அல்லது அத்தகைய தாக்குதல்களுக்குத் திட்டமிடுபவர்களைத் தேடி இஸ்ரேலியப் படைகள் மேற்குக் கரை நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு அடிக்கடி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் ஜெனின் பகுதியில் 200 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், இஸ்ரேலியர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்