நினைவேந்தலுக்கு தயாராகும் தாயகம்!
27 கார்த்திகை 2023 திங்கள் 02:18 | பார்வைகள் : 2276
தமிழர் தாயகமும் மாவீரர் நினைவேந்தலுக்கு பேரெழுச்சியுடன் தயாராகி வருகிறது.
அத்துடன் மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தில் தமிழீழ தேசிய மலரான கார்த்திகை பூ செழித்து வளர்ந்து பூத்திருக்கின்றது.
ஈழ எழுச்சி மலரான இது தமிழீழ தேசிய மலராக கார்த்திகை பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதத்தில் செழித்து வளர ஆரம்பிக்கும் இந்த தாவரம் கார்த்திகை, மார்கழி,தை மாதங்களில் துளிர்ப்போடும் செழிப்போடும் வளர்ந்து பூக்களை பூத்து சூழலை அழகாக்கும்.
மாவீரர் மாதமான கார்த்திகையில் வளர்வதனால் மாவீரரை அஞ்சலிப்பதாக, அஞ்சலிப்பதற்காக இந்த மலர் மலர்வதாக தாம் நினைத்துக் கொள்கின்றோம், என தாயகப்பரப்பில் வாழும் மக்கள் கார்த்திகை மலர் பற்றிய தங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
தமிழீழ தேசத்தின் எழுச்சி நிறங்களான சிவப்பு மஞ்சள் நிறங்களை தன் இதழில் கொண்டிருப்பதால் ஈழ எழுச்சியை இந்த மலர் தங்கள் எண்ணங்களில் தோற்றுவித்து விடுகின்றது என மக்கள் கூறுகின்றனர்.