2027 ஆம் ஆண்டில் வாழ்றேன் - பகீர் தகவல்

27 கார்த்திகை 2023 திங்கள் 08:45 | பார்வைகள் : 4513
2027ஆம் ஆண்டில் சிக்கிக்கொண்டதாக நபர் ஒருவர் கூறியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
2021ல் அதிகம் கவனம் பெற்றவர் சேவியர். இவர் 6 வருடங்களுக்கு முன் எதிர்காலத்தை அடைந்துவிட்டதாகவும், தற்போது அங்கு தனியாக இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், 2027ல் அவர் ஒருவரை தவிர உலகில் வேறு யாரும் இல்லை எனக் கூறி,
ஆதாரமாக சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில், பிரபலமான இடங்களைப் பார்வையிடச் செல்கிறார். நிறைய கூட்டம் இருக்கும் பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒருவரைக் கூட காண முடியவில்லை.
மேலும், சில வீடியோக்களில் லண்டன் தெருக்களில் அவர் நடந்து செல்வதை காண முடிகிறது.
ஆனால், அதிலும் எவருமே இல்லை. தற்போது, அந்த வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது.
இந்த தகவல் நெட்டிசன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டைம் ட்ராவல் சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இந்தக் கூற்றுகள் அனைத்தும் உண்மை என்பதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.