குளிர்காலத்தில் "carbon monoxide" வாயுவை சுவாசித்து 2 பலி, 314 பேருக்கு ஆபத்து.
27 கார்த்திகை 2023 திங்கள் 10:14 | பார்வைகள் : 5917
மணம் இல்லாத 'carbon monoxide: வாயு காற்றில் கலந்திருப்பதை அறியமுடியாத மனிதர்கள் அதனை சுவாசிப்பது குளிர்காலத்தில் அதிகரித்து வருவதாக பிராந்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
குளிர்காலம் ஆரம்பித்த சிலநாட்களில் இதுவரை 314 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 124 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு குறித்த காலப்பகுதியில் 32 பேர் அதிகமாகியுள்ளனர்.
எந்தவித அறிகுறியும் இல்லாத 'carbon monoxide' வாயு, பரமரிக்கப்படாத சுடுநீர் கொதிகலன்கள், நீண்ட கால பாவனையில் உள்ள மின்சார தற்காலிக வெப்பமூட்டும் கருவிகள், காலாவதியான அல்லது பராமரிக்கப்படாத சாதனங்களில் இருந்து வெளியாகி காற்றில் கலக்கிறது. வீடுகளின் காற்றோட்டம் சரியாக இல்லாத நிலையில் அங்கு வசிப்பவர்கள் மீண்டும் மீண்டும் அதே காற்றைச் சுவாசிக்கும் போது அது நஞ்சாக மாறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.