தாயக மக்களின் கண்ணீரில் நனையும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்
27 கார்த்திகை 2023 திங்கள் 12:29 | பார்வைகள் : 7017
கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சரியாக 6.05 மணியளவில், பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டவுள்ளன.
பெருந்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டு தமது மாவீரர்களாகிப் போன தமது உறவுகளை நினைந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
“தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என அனைவரும் ஒரே குரலாய் சங்கமித்து இன்னுயிர் ஈந்த தமது உறவுகளை நினைவுகூரும் உணர்வுபூர்வமான தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாய் அமைகிறது.
நிகழ்வின் நேரலை காட்சிகளை இந்த காணொளி ஊடாக பார்வையிடலாம்
https://web.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=719478466770059

























Bons Plans
Annuaire
Scan