Paristamil Navigation Paristamil advert login

Aubervilliers : மகிழுந்து வாங்க சென்றவரை தாக்கி பணம் பறிப்பு!!

Aubervilliers : மகிழுந்து வாங்க சென்றவரை தாக்கி பணம் பறிப்பு!!

27 கார்த்திகை 2023 திங்கள் 12:40 | பார்வைகள் : 7622


நபர் ஒருவர் மகிழுந்து ஒன்றை வாங்கச் சென்ற நிலையில், தாக்குதலுக்கு இலக்கானதுடன் பணத்தையும் இழந்துள்ளார்.

இச்சம்பவம் சனிக்கிழமை மாலை Aubervilliers (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் மகிழுந்து ஒன்றை வாங்குவதற்கு இணையத்தளத்தில் பார்வையிட்டபோது அவருக்கு பிடித்தமான மகிழுந்து ஒன்றைக் காண்கிறார்.

மகிழுந்து விற்பனையாளருடன் பேரம் பேசி, 4,000 யூரோக்களுக்கு மகிழுந்தை வாங்குவதற்கு சம்மதித்து, சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தனர்.

4,000 யூரோக்கள் பணத்தினை வங்கியில் இருந்து பெற்றுக்கொண்டு, மகிழுந்து வாங்கச் சென்றவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

அங்கு விற்பனையாளர்களாக நின்ற சிலர், குறித்த நபரைத் தாக்கிவிட்டு அவரிடம் இருந்த பணத்தினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

ரைஃபில் வகை துப்பாக்கி ஒன்றின் பின் பிடியினால் முகத்தில் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றனர். காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்