Paristamil Navigation Paristamil advert login

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார்?

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார்?

27 கார்த்திகை 2023 திங்கள் 13:41 | பார்வைகள் : 4385


ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் நிலையில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்ததால் போட்டியாளர்கள் தாங்கள் நாமினேஷன் செய்யும் இரண்டு போட்டியாளர்களை நேருக்கு நேராகவே தெரிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த வாரம் 8 பேர் நாமினேஷனில் சிக்கி உள்ளனர். நீண்ட காலமாக நாமினேஷனில் இருந்து தப்பித்து இருந்த ஜோவிகாவும் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் உள்ளார்.

இந்த வாரம் தினேஷ் நேரடியாக ஏற்கனவே நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் அவரை தவிர விக்ரம், பூர்ணிமா, அனன்யா, கூல் சுரேஷ், விசித்ரா, மணி சந்திரா மற்றும் ஜோவிகா என மொத்தம் 8 பேர் நாமினேஷனில் உள்ளனர்

இதில் விக்ரமுக்கு 6 ஓட்டுகளும், பூர்ணிமாவுக்கு 4 ஓட்டுகளும், அனன்யா, கூல் சுரேஷ், மணி சந்திரா ஆகியோருக்கு தலா 3 ஓட்டுகளும் ,விசித்ரா மற்றும் ஜோவிகாவுக்கு 2 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.நாமினேஷனில் சிக்கிய இந்த எட்டு பேர்களில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் 

வர்த்தக‌ விளம்பரங்கள்