2024ஆம் ஆண்டில் நடக்கப்போவது என்ன? பாபா வங்கா கணிப்பு
28 கார்த்திகை 2023 செவ்வாய் 08:20 | பார்வைகள் : 2518
2023ஆம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில், புத்தாண்டு எப்படி இருக்கும் என இப்போதே மக்கள் யோசிக்கத் துவங்கிவிட்டார்கள்.
ஜோதிட வல்லுநர்கள் முதலானோர் 2024ஐக் குறித்து என்ன சொல்லியிருக்கிறார்கள் என மேலை நாடுகளிலேயே ஒரு கூட்டத்தார் கவனித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவ்வகையில், தான் கணித்ததில் 85 சதவிகிதம் சரியாக நிறைவேறிய ஒரு நபர் மீது மக்கள் கவனம் திரும்பியுள்ளது. அவர், பாபா வங்கா.
மேலை நாடுகளில் நடக்கப்போகும் விடயங்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் நடக்கப்போகும் ஒரு விடயத்தையும் பாபா வங்கா கணிக்க, அது அப்படியே நிறைவேறியது என்னும் ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஆம், இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ஆரஞ்சு வண்ண உடையில் கொல்லப்படுவார் என 1969ஆம் ஆண்டே கணித்துள்ளார் பாபா வங்கா.
அவர் கணித்ததைப் போலவே, 1984ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், தனது பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார் இந்திரா. அவர் கொல்லப்படும் நாளில் அவர் ஆரஞ்சு வண்ண சேலையை உடுத்தியிருந்தார்.
2024ஆம் ஆண்டைப் பொருத்தவரை, ஒரு பெரிய பொருளாதார சிக்கல் உருவாகும் என்றும், அது உலகப் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார் பாபா வங்கா.
ஒரு பெரிய நாடு உயிரி ஆயுதங்களை பரிசோதிக்கவோ அல்லது பிரயோகிக்கவோ செய்யும் என்று கூறியுள்ளார் வங்கா பாபா.
மேலும், ஐரோப்பாவில், 2024இல் தீவிரவாதிகள் தாக்குதல் ஒன்றை நிகழ்த்துவார்கள் என்றும், ரஷ்ய ஜனாதிபதியாகிய விளாடிமிர் புடின் அவரது நாட்டைச் சேர்ந்த ஒருவராலேயே கொல்லப்படுவார் என்றும் பாபா வங்கா கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.