Paristamil Navigation Paristamil advert login

தென்கொரியாவில் குறைவடைந்த குழந்தை பிறப்பு விகிதம் - அரசின் அதிரடி

தென்கொரியாவில் குறைவடைந்த குழந்தை பிறப்பு விகிதம் - அரசின்  அதிரடி

28 கார்த்திகை 2023 செவ்வாய் 09:57 | பார்வைகள் : 2811


தென்கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் பொருத்தமான ஜோடிகளை இணைக்கும் முயற்சியில் தென்கொரிய  அரசாங்கம்  தீவிரம் காட்டி வருகின்றது.

கணவன் மற்றும் மனைவியை தேர்வு செய்ய   நிகழ்ச்சி ஒன்றினையும் நடத்தியுள்ளது.  

இதற்காகவே தலைநகர் சோலுக்கு அருகில் ஒரு ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

அதில் 100 தென்கொரிய ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் தங்களுக்கு ஏற்ற கணவர் அல்லது மனைவியைக் கண்டுபிடிக்க ஆண்களும் பெண்களும் பங்கேற்றுள்ளனர். 

தென்கொரியாவில் திருமணம், குழந்தை பிறப்பு எண்ணிக்கை சரிந்துள்ளது.

இதைச் சரிசெய்யவே இந்த நிகழ்ச்சிக்கு தென்கொரிய அரசாங்கம் ஏற்பாடு செய்தது. 

தென்கொரியாவின் குழந்தைப் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 0.78 விழுக்காடாகக் குறைந்தது.

இந்நிலையில் மக்கள் திருமணத்தில் இணைந்து குழந்தைகளை பெற்றுக்கொள்ள இத்தகைய நிகழ்ச்சிகள் போதாது என்றும் மேலும் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தென் கொரிய அரசாங்கம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்