இலங்கையில படகு ஒன்றுக்குள் சிக்கிய பெருந்தொகை தங்கம்!

13 ஆடி 2023 வியாழன் 06:44 | பார்வைகள் : 9601
சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 8 கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கற்பிட்டி களப்பில் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினர் புதன்கிழமை கற்பிட்டி களப்பு பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கொண்டு செல்ல முயன்ற 8 கிலோ 450 கிராம் தங்கத்துடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன் படகு ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகு ஒன்றை அவதானித்து பரிசோதித்த போது, குறித்த படகில் மிக நுணுக்கமாக தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.