யூத மதத்துக்கு எதிரான தாக்குதல்கள்! - விசாரணைகள் ஆரம்பம்!!

31 ஐப்பசி 2023 செவ்வாய் 12:58 | பார்வைகள் : 11114
பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் யூத மதத்துக்கு எதிரான இலட்சணைகள், குறிச்சொற்கள் வரையப்பட்ட நிலையில், அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஒக்டோபர் 30, நேற்று திங்கட்கிழமை இரவு இந்த அடையாளங்கள் 14 ஆம் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் வரையப்பட்டுள்ளன. அத்தோடு Saint-Ouen மற்றும் Aubervilliers நகரங்களிலும் அவை கண்டறியப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 60 இடங்களில் அவரை வரையப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
'மிகவும் மோசமான செயல், அருவருக்கத்தக்க நடவடிக்கை' என 14 ஆம் வட்டார நகர முதல்வர் Carine Petit தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல்-ஹாசா யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து பிரான்சில் யூத மதம் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.