சனாதன விவகாரத்தை அண்ணாமலை அரசியலாக்குகிறார்- ஐகோர்ட்டில் உதயநிதி தரப்பு வாதம்

31 ஐப்பசி 2023 செவ்வாய் 20:16 | பார்வைகள் : 5211
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது சர்ச்சையான நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று வழக்கு விசாரணை நடைபெற்றபோது, உதயநிதி தரப்பில் கூறியதாவது;
சனாதன விவகாரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலாக்குகிறார். சனாதன பேச்சு தொடர்பாக ஆதாரங்களை சமர்பிக்காததால் கோ வாரண்டோ வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ஆதாரங்களை கேட்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது.
மனுதாரர்கள்தான் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. எனவே, ஆதாரங்களை சமர்பிக்காவிடில் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது
இதையடுத்து, அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட்டு நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது.