இலங்கையில் மீண்டும் பணவீக்கம் அதிகரிப்பு
31 ஐப்பசி 2023 செவ்வாய் 15:16 | பார்வைகள் : 3719
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின் பிரகாரம் ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் 1.3 சதவீதமாக இருந்த பணவீக்கம் இம்மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உணவுப் பணவீக்கம் மாறாமல் தொடர்ந்து -5.2 தவீதமாக உள்ளது.
இதற்கிடையில், உணவு அல்லாத பணவீக்கம் செப்டம்பரில் 4.7% ஆக இருந்ததுடன், அது ஒக்டோபரில் 4.9% ஆக அதிகரித்துள்ளது.
அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக கடந்த ஆண்டு இலங்கையில் பணவீக்கம் 76 வீதம்வரை உயர்வடைந்ததுடன், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனையவற்றுக்கான செலவீனங்கள் பன்மடங்கு அதிகரித்திருந்தன.
இவ்வாண்டு ஆரம்பம் முதல் பணவீக்கம் குறைவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.