Paristamil Navigation Paristamil advert login

வித்யாசாகர் மகனுடன் சிவாங்கி காதலா?

வித்யாசாகர் மகனுடன்  சிவாங்கி காதலா?

31 ஐப்பசி 2023 செவ்வாய் 15:35 | பார்வைகள் : 7419


இசையமைப்பாளர் வித்யாசாகர் மகனுடன் சிவாங்கி நெருக்கம் காட்டியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.சூப்பர் சிங்கர்’, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங்கி. இந்தப் பிரபலத்தின் மூலம் சினிமாவிலும் நடிக்க களமிறங்கினார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்த சிவாங்கி தற்போது இசை ஆல்பத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் வித்யாசாகரின் மகனான ஹர்ஷவர்தனுடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடல் செய்து இருந்தார். அப்போது இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இதனையடுத்து அந்த நட்பு காதலாக மாறி இருப்பதாக சொல்லப்படுகிறது. மீண்டும் இருவரும் இணைந்து ஆல்பம் பாடல் செய்து உள்ளனர். அதில் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது.

தாங்கள் காதலிக்கிறோம் என இருவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 'குக் வித் கோமாளி’ நிகழ்வில் சிவாங்கி அஸ்வின் மீது காதல் வயப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்