Paristamil Navigation Paristamil advert login

முந்த்ரா நகரில் ரூ.4 லட்சம் கோடிக்கு முதலீடு செய்ய அதானி குழுமம் இலக்கு

 முந்த்ரா நகரில் ரூ.4 லட்சம் கோடிக்கு முதலீடு செய்ய அதானி குழுமம் இலக்கு

1 கார்த்திகை 2023 புதன் 08:29 | பார்வைகள் : 2233


குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா நகர் பகுதியில், அதானி குழுமத்திற்கு சொந்தமாக காற்றாலை மற்றும் சோலார் பேனல் தயாரிப்பு ஆலையுடன், பிரமாண்டமான துறைமுகம் ஒன்றும் உள்ளது.

இத்துறைமுகத்தின் 25வது ஆண்டையொட்டி, அடுத்தகட்ட வளர்ச்சிக்காக, இத்துறைகளில் அடுத்த ஆறு ஆண்டுகளில், 4 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அக்குழுமத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

முந்த்ரா நகரில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, அதானி குழுமம், சிறிய அளவில் துவங்கிய முதலீடு, தற்போது 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக அதிகரித்துள்ளது. 

எங்கள் ஆலை மற்றும் துறைமுகத்தின் வாயிலாக, இதுவரை 25,000 பேர் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

முந்த்ரா நகர் பகுதியில் மட்டும் அடுத்த ஆறு ஆண்டுகளில், 3.50 முதல் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, பல்வேறு பிரிவுகளில் முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.

இதனால், கூடுதலாக 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன், இப்பகுதியில் தொழில் வளர்ச்சியும் ஏற்படும்.

முந்த்ரா துறைமுகம், மாதந்தோறும் ஐந்து லட்சம் டன் சரக்குகளை கையாளுகிறது. நாட்டிலேயே அதிக சரக்குகளை கையாளும்  துறைமுகமாக உருவெடுத்து வருகிறது. இங்கு எட்டு முனையங்கள் உள்ளன.

இந்த முனையங்களை மேலும் விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறோம்.

அதன்படி, வரும் 2030ம் ஆண்டுக்குள், 68,973 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இத்துடன், காப்பர் தயாரிக்கும் ஆலை ஒன்றை, 8,783 கோடி ரூபாயில் உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.<br><br>இவ்வாறு அவர் கூறினார்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்