இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்
1 கார்த்திகை 2023 புதன் 07:20 | பார்வைகள் : 3553
\இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நேற்றைய தினம் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.9 சதவீதத்தால் வலுவடைந்துள்ளது.
மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, யூரோ, ஸ்ரேலிங் பவுண்ட், ஜப்பானின் யென் மற்றும் இந்திய ரூபாய் என்பவற்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் இறுதி வரையில் இலங்கையின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.