Paristamil Navigation Paristamil advert login

நவம்பர் முதலாம் திகதி உலக சைவ உணவு சித்தாந்த தினம்.

நவம்பர் முதலாம் திகதி உலக சைவ உணவு சித்தாந்த தினம்.

1 கார்த்திகை 2023 புதன் 07:40 | பார்வைகள் : 3963


இறைச்சிவகை உணவுகளைத் தவிர்ப்பது, முழுமையாக மரக்கறி உணவுவகைகளை உட்கொள்ளும் 'உலக சைவ உணவு சித்தாந்த தினம்' நவம்பர் முதலாம் திகதி. பிரான்ஸ் நாட்டவர்களில் 2.2% சதவீத மக்கள் முழுமையாக மரக்கறி உணவுவகைகளை உட்கொள்பவர்கள் இருக்கிறார்கள் என அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது.

இவர்களில் முன்பு இறைச்சிவகை உணவுகளை உட்கொண்டு, பின்னர் முழுமையாக மரக்கறி உணவுவகைகளை உட்கொள்ளும் மூவரிடம் "ஏன் இந்த மாற்றும்?" என கேட்கப்பட்ட போது..

Haute-Saône இல் உள்ள Pesmes இல் வசிப்பவர்  Quentin. 32 வயது இவர் தனது 15 வயதில் இருந்து மரக்கறி உணவுவகைகளை உட்கொள்பவர்.

"நான் விலங்குகளை உணவுக்காக கொல்லப்படுவதை வெறுக்கிறேன், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறேன், உடலுக்கு ஆரோக்கியமான  மரக்கறி உணவுவகைகளை உட்கொள்ளும் போது என் உடல் பருமன் இன்றி இருப்பதை உணர்கிறேன்" என்கிறார்.

 2005ம் ஆண்டு முதல் முழுக்க முழுக்க மரக்கறி உணவுவகைகளை உட்கொள்ளும் 33வயதான Céline குறிப்பிடும் போது. "இன்று உலகில் 75% விவசாய நிலங்கள் கால்நடைகளை வளர்க்கப் பயன்படுகிறது. "உதாரணமாக, பிரேசிலிய அமேசனில், 63% சதவீத காடுகள் அழிப்பட்டு கால்நடைகள் வளர்க்கப் படுகின்றன. அன்று விலங்குகளை இயற்கையாக வளர்த்து இறைச்சி எடுத்தார்கள், ஆனால் இன்று இறைச்சிக்காக விலங்குகள் வளர்க்கப்படும் போது அவை கூடிய நிறை இருக்க வேண்டும் என்பதற்காக பல இரசாயன பொருட்களை உணவில் கலந்து விலங்குகளுக்கு கொடுக்கிறார்கள், அந்த இறைச்சியை நாங்கள் உண்ணும் போது, நாங்களும் அதே இரசாயன பொருட்களை உணவில் உட்கொள்கிறோம்" என்கிறார்.

Parisசில் வசிக்கும் Justine குறிப்பிடும் போது "நான் பண்ணை வீட்டில் பிறந்தவள்,  இறைச்சிக்காக விலங்குகள் வாகனங்களில் ஏற்றப்படும் போது அவை அழும் சத்தம் கேட்கும் இதுதான் முதல் காரணம், இறைச்சி வகை உணவுகளை சமைப்பதில் அதிக கற்பனை இல்லை, மரக்கறி உணவுகளை சமைப்பதில் நிறையவே கற்பனை உண்டு" என தெரிவித்த Justine "ஆரம்பத்தில் நான் மரக்கறி உணவை உண்ண ஆரம்பித்த போது நண்பர்கள் கேலி, கிண்டல் செய்தார்கள், நான் அதனை பொருட்படுத்தவில்லை, பயணங்களின் போதும் சில சிரமங்கள் இருந்தது இப்போது சமைக்காத மரக்கறி உணவுகளை பயணங்களின் போது உணர்கிறேன்" என்கிறார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்