பிரான்சில் ஆண்டுதோறும் 'புகையிலை இல்லாத மாதம் நவம்பர்' இன்று புதன்கிழமை தொடங்குகிறது.
1 கார்த்திகை 2023 புதன் 07:41 | பார்வைகள் : 3595
பிரான்ஸ் நாட்டவரில் சுமார் 12 மில்லியன் மக்கள் ஒவ்வொரு நாளும் புகைப்பிடிக்கிறார்கள். இந்த நிலை கடந்த நான்கு ஆண்டுகளாக மாறாமலே உள்ளது, புகைப்பிடிப்பவர்களில் இருவரில் ஒருவர் மரணத்தை தழுவுகிறார்கள். ஆண்டொன்றுக்கு சுமார் 75 000 மரணங்கள் புகைப்பிடிப்பவர்கள்.
இதனையடுத்து கடந்த 2016ம் ஆண்டு முதல் நவம்பர் மாதத்தின் 30 நாட்களும் "mois de sans tabac novembre" புகையிலை இல்லாத மாதம் நவம்பர்' கடைப்பிடிக்கப்படு வருகிறது.
(président de l'Alliance contre le tabac) புகைப்பிடித்தலுக்கு எதிரான அமைப்பின் தலைவர் Loïc Josseran குறிப்பிடும் போது
"புகையிலை இல்லாத மாதம் என்பது ஒருவரின் நுகர்வு மற்றும் ஒருவரின் புகைப்பிடிக்கும் விருப்பத்தை கேள்விக்குட்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு"
என தெரிவித்துள்ளார்
மேலும் கருத்து தெரிவித்த Loïc Josseran "கடந்த ஆண்டு mois de sans tabac novembre" புகையிலை இல்லாத மாதம் நவம்பர்' கடைப்பிடிக்கப்படு 25% சதவீத வெற்றி பெற்றது" என தெரிவித்துள்ள அவர், இவ்வாண்டு மிகவும் குறைவான 120,000 புகைப்பிடிப்பவர்களே தங்களை பதிவு செய்துள்ளனர் என கவலை தெரித்துள்ளார்.
புகைப்பிடித்தலை கட்டுப்படுத்த அரசாங்கம் அதனுடைய விலையை ஏற்றுவதைவிட விழிப்புணர்வுகளே அதிகம் ஏற்படுத்த வேண்டும் எனவும், அதிக விலையை ஏற்படுத்துவதால் கள்ள சந்தையில் அவை விற்பனையாகிறது எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.