அகதிகள் முகாம் மீது தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
1 கார்த்திகை 2023 புதன் 08:10 | பார்வைகள் : 4122
காசா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்து.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இஸ்ரேல் போர் பிரகடனத்தை அறிவித்து, காசா பகுதிக்கு சரமாரியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து செயல்படும் இடம் என தெரிவித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியது.
இதன்போது இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் காசா நகரம் முழுவதும் சேதங்களுக்குள்ளாகியுள்ளது.
தாக்குதலின் காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அகதிகள் முகாம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது,
அதில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசா எல்லை வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த முகாம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 150 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேலானது அதிக குடியிருப்புகள் உள்ள பகுதியை குறிவைத்து இருக்கிறது.
மேலும் இடிந்து விழுந்த குடியிருப்பு பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து உயிரிழந்தோரின் சடலங்கள் மீட்கப்படும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி இருகின்றது.