Paristamil Navigation Paristamil advert login

பூனை தோற்றத்தில் மாறிய வினோத பெண்

பூனை தோற்றத்தில் மாறிய வினோத பெண்

1 கார்த்திகை 2023 புதன் 08:26 | பார்வைகள் : 5980


இத்தாலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பூனை தோற்றத்தில் மாறுவதற்கு உடலில் பல மாற்றங்களை செய்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பலரும் லைக்குகளுக்காக பல்வேறு வினோத செயல்களில் ஈடுபடுவார்கள். மேலும், தங்களது உடலை வற்புறுத்தி, உயிரை பணயம் வைக்கும் அளவிற்கு சில விடயங்களை செய்வார்கள்.

ஒரு சிலர் பிரபலங்களை போல தோற்றம் அளிப்பதற்காக டாட்டூ குத்திக் கொள்வது, பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது போன்ற செயல்களை செய்வார்கள்.

ஆனால், இத்தாலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சியாரா டெல்அபேட் (22), மனித பூனையாக மாற வேண்டும் என உடலில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார்.

சியாரா டெல்அபேட் தான் ஒரு பூனையாக மாற வேண்டும் என்பதற்காக உடலில் 20 மாற்றங்களை செய்துள்ளார். மேலும், இது தொடர்பாக பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

இவர், தனது உடல் அமைப்பை மாற்றுவதற்காக 11 வயதில் இருந்தே உடலில் துளையிடுவது, பச்சை குத்துவது என பல விடயங்களை செய்துள்ளார். அதாவது, துளையிடப்பட்ட மூக்கு மற்றும் உதடு, நாக்கை இரண்டாக்குதல், கொம்புகள் வைத்துக் கொள்வது என இவரது உடலில் மொத்தம் 72 துளைகள் உள்ளன.

இத்தனை மாற்றங்கள் செய்தும் தான் ஒரு முழு பூனையாக மாறவில்லை என சியாரா டெல்அபேட் கூறியுள்ளார். முக்கியமாக, வால் இணைத்தல், கண்களுக்கு அறுவை சிகிச்சை, பற்களில் மாற்றம் போன்றவை இவரது பட்டியலில் உள்ளன.

இவ்வாறு செய்வதால் ஏற்படும் வலி மற்றும் காயம் பழகிவிட்டதாகவும் கூறியுள்ளார். பூனை தோற்றத்தில் இருந்தால் மட்டுமே தனக்கு தைரியம் ஏற்படுவதாகவும் சியாரா டெல்அபேட் கூறியுள்ளார்.  

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்