Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல்-ஹமாஸ் : ‘விவாதம் மேற்கொள்வதை வெறுக்கிறேன்!” - ஜனாதிபதி மக்ரோன்!

இஸ்ரேல்-ஹமாஸ் : ‘விவாதம் மேற்கொள்வதை வெறுக்கிறேன்!” - ஜனாதிபதி மக்ரோன்!

1 கார்த்திகை 2023 புதன் 14:44 | பார்வைகள் : 6070


”இஸ்ரேல்-ஹமாஸ் எனும் விவாதத்தை மேற்கொள்ளுவதை நான் வெறுக்கிறேன். ஒவ்வொருவரின் உயிரும் முக்கியம்” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை ஜனாதிபதி மக்ரோன் கஜகஸ்தானுக்கு (Kazakhstan) பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு தலைநகர் Astana வில் உள்ள கல்லூரி ஒன்றுக்குச் சென்ற மக்ரோன், மாணவர்களைச் சந்தித்து உரையாடினார். இந்த உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

“முதலில் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் பயங்கரவாத தாக்குதலுக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பயங்கரவாத குழுக்களை குறிவைத்து தண்டிக்க வேண்டும். மக்களை இல்லை. இந்த வேறுபாட்டை உருவாக்க விரும்புகிறேன். ஏனென்றால் இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் முக்கியம். இஸ்ரே-ஹமாஸ் எனும் விவாதத்தை நான் வெறுக்கிறேன். எனக்கு இஸ்ரேலியர்களின் உயிருக்கும் முக்கியம். பாலஸ்தீனர்களின் உயிரும் முக்கியம்!” என மக்ரோன் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்