Paristamil Navigation Paristamil advert login

அனர்த்தம் தொடர்கிறது! - 14 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

அனர்த்தம் தொடர்கிறது! - 14 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

2 கார்த்திகை 2023 வியாழன் 15:02 | பார்வைகள் : 6023


புயல் காரணமாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இன்று வியாழக்கிழமை நண்பகலின் பின்னரும் தொடர்கிறது. சற்று முன்னர் 14 மாவட்டங்களுக்கு பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு சியாரா புயல் காரணமாக Côtes-d'Armor, Finistère ம்ற்றும் Manche ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சற்று முன்னர் இந்த எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது.

அதையடுத்து, புயல், மழை, வெள்ளம், சுனாமி உள்ளிட்ட அனர்த்தங்களினால் புதிதாக 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Nord,
Pas-de-Calais,
Somme,
Oise,
Seine-Maritime

ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு புயல் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Corse-du-Sud மற்றும் Pas-de-Calais மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Haute-Corse மற்றும் Corse-du-Sud மாவட்டங்களுக்கு அடை மழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Corse-du-Sud மாவட்டத்துக்கு இடி மின்னல் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Pas-de-Calais, Somme, Seine-Maritime, Calvados, Landes, Pyrénées-Atlantiques, Bouches-du-Rhône, Var, Alpes-Maritime, Corse-du-Sud ஆகிய பத்து மாவட்டங்களுக்கு சுனாமி (கடல் அலை கொந்தளிப்பாக காணப்படும்) எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.




 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்