உலக கோப்பை போட்டி - அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை வீரர்

3 கார்த்திகை 2023 வெள்ளி 02:26 | பார்வைகள் : 6262
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷன்கா நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் படுமோசமாக சொதப்பியதால் அந்த அணி 55 ஓட்டங்களில் சுருண்டது.
ஆனால், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷன்கா மிரட்டலாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது ஆறுதலாக அமைந்தது.
இதன்மூலம் மதுஷன்கா 18 விக்கெட்டுகளை வீழ்த்தி நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதலிடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்த இடங்களில் பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி (16), தென் ஆப்பிரிக்காவின் மார்கோ ஜென்சென் (16), அவுஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா (16) ஆகியோர் உள்ளனர்.
அதேபோல் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் மதுஷன்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1