Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் 1000 கோடிக்கு ஏலம் போகவுள்ள ஒரு ஓவியம்!

அமெரிக்காவில் 1000 கோடிக்கு ஏலம் போகவுள்ள ஒரு ஓவியம்!

3 கார்த்திகை 2023 வெள்ளி 02:35 | பார்வைகள் : 6230


அமெரிக்கா -  நியூயார்க் நகரில் எதிர்வரும் 8ம் திகதி முதல் தலை சிறந்த ஓவியங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி ஒன்று தொடங்கவுள்ளது.

இங்கு உலக புகழ் பெற்ற ஓவியர்களின் பல்வேறு ஓவியங்கள் ஏலம் விடப்படவுள்ளது.

இந்த ஏலத்தில் உலகப் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோவின் தலைசிறந்த ஓவியம் ஒன்றும் ஏலம் விடப்படவுள்ளது.

இந்த ஓவியம் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் பிரபல ஆப்பிரிக்க அமெரிக்க ஓவியரான ஜீன்-மைக்கேல் பாஸ்குயட் 1982ல் வரைந்த 8 அடி உயரமுள்ள ஓவியமும் ஏலம் விடப்படவுள்ளது.

இந்த ஓவியம் 499 கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்