Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸ் அமைப்பால் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர்

ஹமாஸ் அமைப்பால் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர்

3 கார்த்திகை 2023 வெள்ளி 12:09 | பார்வைகள் : 5420


ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுஜித் பண்டார யட்டவர (48) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார  தெரிவித்துள்ளார்.

அடையாளம் காண முடியாத அளவில் சிதைந்திருந்த சடலம் அவரின் பிள்ளைகளின் டிஎன்ஏ மாதிரிகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்