Paristamil Navigation Paristamil advert login

மகிழுந்துக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ரொக்கப்பணம்!!

மகிழுந்துக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ரொக்கப்பணம்!!

3 கார்த்திகை 2023 வெள்ளி 15:09 | பார்வைகள் : 4398


நெடுஞ்சாலை ஒன்றில் பயணித்த மகிழுந்து ஒன்றை சோதனையிட்டதில் பெருமளவான பிரித்தானிய பவுண்ட்ஸ் (livre sterling) பணம், மற்றும் யூரோக்கள் பணம் கைப்ப்ற்றப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் 18 ஆம் திகதி இச்சம்பவம் Montmélian (Savoie) நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த நகரை ஊடறுக்கும் A43 நெடுஞ்சாலையில் பயணித்த மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்திய சுங்கவரித்துறையினர் , சந்தேகத்தின் அடிப்படையில் அதனை சோதனையிட்டனர். மகிழுந்தி பயணித்த நபர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்ததை அடுத்து, அவரது மகிழுந்து சோதனையிடப்பட்டது.

மகிழுந்தின் எரிபொருள் தாங்கியில், காற்று உறிஞ்சும் இயந்திரத்தினை பயன்படுத்தி பொதி செய்யப்பட்ட ( vacuum-sealed) பணக்கட்டுக்கள் மறைத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதில் கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் பவுண்ட்ஸ் ரொக்கப்பணமும், அதே மதிப்புள்ள யூரோக்கள் பணமும் இருந்துள்ளன.

உடனைடியாக குறித்த நபரை சுங்கவரித்துறையினர் கைது செய்தனர். பணமும் கைப்பற்றப்பட்டது. குறித்த நபர் இங்கிலாந்தில் இருந்து d'Ancône துறைமுகம் வழியாக கிரீஸ் நோக்கி செல்வதாக தெரிவித்துள்ளார்.

விசாரணைகளில் குறித்த நபர் பணத்தை கடத்திச் சென்றமை தெரியவர, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதேவேளை, குறித்த நபர் பிரான்சுக்குள் நுழைய அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்