இயற்கை பேரழிவு - இழப்பீடு வழங்கப்படும் என ஜனாதிபதி மக்ரோன் உறுதி!

3 கார்த்திகை 2023 வெள்ளி 16:48 | பார்வைகள் : 13005
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று வெள்ளிக்கிழமை மாலை Finistère நகருக்கு பயணித்திருந்தார். அங்கு மக்களையும், தீயணைப்பு படையினரையும் சந்தித்து அவர்களுடன் உடையாரினார்.
சியாரா புயல் தாக்குதலின் போது மிக துரிதமாக செயற்பட்டு பல உயிர்களை காப்பாற்றியிருந்த வீரர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ”புயலின் போது மிகச்சிறப்பாக செயற்பட்ட வீரர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என மக்ரோன் குறிப்பிட்டார்.
அதேவேளை, 1999 ஆம் ஆண்டு பிரான்சில் ஏற்பட்ட புயலின் போது நாம் கற்றுக்கொண்டு உருவாக்கிய கருவிகள்.. கற்றுக்கொண்ட அனுபவம் போன்றவற்றின் பலனாகும்!” எனவும் மக்ரோன் தெரிவித்தார்.
அதேவேளை, தேசிய இடர்பாடு/ இயற்கை பேரழிவு /விவசாய பேரிடர் போன்ற இழப்புக்கள் ஆராயப்பட்டு, இழப்பீடுகள் வழங்கப்படும் என்பதையும் ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.