காசாவிற்குள் பாதுகாப்பான இடம் இல்லாமல் தவிக்கும் மக்கள்.... ஐ.நா எச்சரிக்கை
4 கார்த்திகை 2023 சனி 09:33 | பார்வைகள் : 3027
இஸ்ரேல், காசாவிற்குள் தரைவழி தாக்குதலை முன்னெடுத்து வருகின்றது.
ஹமாஸ் அமைப்பினரின் இராணுவ தளங்களை குறி வைப்பதாக தெரிவித்து அகதிகள் முகாம் அமைந்துள்ள பகுதிகள் மீது வான் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
அந்த வகையில் வடக்கு காசாவின் ஜபாலியாவில் ஐக்கிய நாடுகள் சபையால் பள்ளிகளில் இருந்து மக்கள் தங்குமிடமாக மாற்றப்பட்ட கட்டிடங்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதைப் போல 4 ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தின் தங்கும் இடங்கள் கடந்த 24 மணி நேரத்திற்குள் தாக்கப்பட்டு இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காசாவில் தற்போது பாதுகாப்பான தங்கும் இடம் என்று எதுவும் இல்லை என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும் போரினால் இருப்பிடத்தை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் பல ஐ.நா கட்டிடங்களில் தஞ்சம் அடைகின்றனர்.
இதற்கிடையில் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை போர் இடை நிறுத்தப்பட வேண்டும் என்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த போரிக்கையை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.