பிரித்தானியாவில் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை
4 கார்த்திகை 2023 சனி 09:49 | பார்வைகள் : 3878
பிரித்தானியாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்றை முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செயற்பாடானது ஆத்திரமூட்டும் செயல் மட்டுமின்றி அவமரியாதை செய்வதாகும் என ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நினைவேந்தல் நிகழ்வுகள் கண்டிப்பாக எந்த பாதிப்பும் இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கான நினைவேந்தல்களை காசா போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பேரணி சீர்குலைக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
வரும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு ராயல் ஆல்பர்ட் மண்டபத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுடன் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும். குறித்த நிகழ்வுகளில் பிரித்தானிய அரச குடும்பத்தின் மூத்த பிரதிந்திகள் கலந்து கொள்வார்கள்.
மேலும், நினைவேந்தல் நிகழ்வுகள் கண்டிப்பாக எந்த பாதிப்பும் இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கான நினைவேந்தல்களை காசா போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பேரணி சீர்குலைக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
வரும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு ராயல் ஆல்பர்ட் மண்டபத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுடன் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும். குறித்த நிகழ்வுகளில் பிரித்தானிய அரச குடும்பத்தின் மூத்த பிரதிந்திகள் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில், காவல்துறைக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்குமாறு பிரதமர் ரிஷி சுனக் உள்விவகார செயலாளர் சுயெல்லா பிரேவர்மனை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனால், குறிப்பிட்ட பகுதிகளில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நினைவேந்தல் நிகழ்வுகளை சீர்குலைக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு காவல்துறை தலைவருக்கும் பிரதமர் ரிஷி சுனக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.