இஸ்லாமிய பாடசாலைக்கு கொலை மிரட்டல் - விசாரணைகள் ஆரம்பம்!
4 கார்த்திகை 2023 சனி 12:09 | பார்வைகள் : 10577
Nanterre நகரில் உள்ள இஸ்லாமிய பாடசாலை (institut musulman) ஒன்றுக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய பள்ளிவாசலும், இஸ்லாமிய கல்வி நிலையமும் அமைந்த Ibn Badis எனும் பாடசாலைக்கே இந்த கொலை மிரட்டல் கடந்தவாரத்தில் விடுக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 29 ஆம் திகதி அன்று குறித்த பாடசாலை நிர்வாகம் இது தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.
"முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை நான் மிகவும் உறுதியாகக் கண்டிக்கிறேன்!" என அவர் தெரிவித்தார். மேலும், "Nanterre வழக்கறிஞர் அலுவலத்தினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள. வெறுப்புணர்வுடன் இருப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்!" எனவும் அவர் தெரிவித்தார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan