Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்ட 20 வெளிநாட்டவர்கள்!!

பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்ட 20 வெளிநாட்டவர்கள்!!

4 கார்த்திகை 2023 சனி 14:23 | பார்வைகள் : 14135


20 வெளிநாட்டவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

குற்றச்செயல்களின் ஈடுபட்டவர்களே நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 18 தொடக்கம் 61 வயதுடைய அவர்கள், பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் எனவும், ’உளவுத்துறையினரால்’ ஆபத்தானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

உள்துறை அமைச்சர் தெரிவிக்கையில், “உளவுத்துறையினரால் நாட்டுக்கு ஆபத்தானவர்கள் என குறிப்பிடப்படும் எந்த ஒரு வெளிநாட்டவர்களும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்!” என குறிப்பிட்டார்.

ஒக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை 178 வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்