Val-d'Oise : காற்றில் பரவிய விஷம்! - 11 பேர் மருத்துவமனையில்!
4 கார்த்திகை 2023 சனி 16:07 | பார்வைகள் : 2731
விஷவாயுவை சுவாசித்த பதினொரு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி, சுவாசிக்க சிரமப்பட்டதாக அறிய முடிகிறது.
Garges-lès-Gonesse நகரில் உள்ள மூன்று அடுக்கு கட்டிடம் ஒன்றில் இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. அங்கு திடீரென (Les intoxications au monoxyde de carbone) விஷவாயு பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து கட்டிடத்தில் வசித்த பலர் மூச்சுத்திணறலுக்கு உள்ளானார்கள்.
உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். மொத்தமாக 47 தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டு கட்டிடத்தில் வசித்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
11 பேர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஏழு பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் வருடத்துக்கு 1,300 இதுபோன்ற விசவாயு பரவல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.