காஸா பகுதியில் இருந்து பிரெஞ்சு மக்கள் மீண்டும் வெளியேற்றம்!\

4 கார்த்திகை 2023 சனி 20:00 | பார்வைகள் : 8562
காஸா பகுதியில் இருந்து இன்று இரண்டாவது நாளாக பல பிரெஞ்சு மக்கள் வெளியேறியுள்ளனர்.
இன்று சனிக்கிழமை கிட்டத்தட்ட 40 பேர் காஸாவில் இருந்து வெளியேறியுள்ளனர். காஸா பகுதியையும்-எகிப்த்தையும் இணைக்கும் Rafah eல்லை வழியாக குறித்த மக்கள் வெளியேறி எகிப்த்துக்குள் நுழைந்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் பிரான்சுக்கு திரும்புவார்கள் என அறிய முடிகிறது.
காஸாவில் தங்கியுள்ள இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை அங்கிருந்து அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் பணி கடந்த இரு நாட்களாக இடம்பெற்று வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை காஸாவில் இருந்து 34 பிரெஞ்சு நபர்கள் தங்களது குடும்பத்தினருடன் வெளியேறியிருந்தனர்.
இந்நிலையிலேயே இன்று இந்த இரண்டாம் கட்ட வெளியேற்றம் இடம்பெற்றதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1