Domingos புயல்! - 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
5 கார்த்திகை 2023 ஞாயிறு 06:00 | பார்வைகள் : 5617
புயல், மழை, வெள்ளம் மற்றும் சுனாமி போன்ற அனர்த்தங்களால் 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை Alpes-Maritimes மாவட்டத்துக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Vendée, Charente, Charente-Maritime, Gironde, Deux-Sèvres மற்றும் Vienne ஆகிய மாவட்டங்களில் பெரும் புயல் தாக்கம் ஏற்படும் எனவும், மணிக்கு 140 கி.மீ வேகம் வரை புயல் பதிவாகும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Pas-de-Calais, Vienne, Deux-Sèvres, Charente, Charente-Maritime, Dordogne, Corrèze, Haute-Corse மற்றும் Corse-du-Sud ஆக்ய மாவடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Haute-Corse ம்ற்றும் Corse-du-Sud மாவட்டங்களில் பலத்த மழை பதிவாகும் என என் அஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Alpes-Maritimes, Charente-Maritime, Corse-du-Sud, Gironde, Bouches-du-Rhône ம்ற்றும் Var ஆகிய மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், இராட்சத அலைகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இந்த 14 மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை Domingos புயல் காரணமாக 140 கி.மீ வேகம் வரை புயல் வீசியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்து.