'போர் நிறுத்த’ கோரிக்கையுடன் பரிசில் இடம்பெற்ற பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டம்!
5 கார்த்திகை 2023 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 3940
நேற்று சனிக்கிழமை நண்பகலின் பின்னர் பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இஸ்ரேலில் போர் நிறுத்தம் கொண்டுவரும் படி கோரி பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
நவம்பர் 4, சனிக்கிழமை Place de la République பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பித்திருந்தது. அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் Place de la Nation நோக்கி சென்றனர். ”பாலஸ்தீனத்துக்கு விடுதலை!! காஸாவுக்கு விடுதலை!!” ("Libérez Gaza, libérez la Palestine") என போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பிக்கொண்டு செல்வதையும், கைகளில் பாலஸ்தீன கொடிகளை சுமந்து செல்வதையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 19,000 பேர் பங்கேற்றிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதேவேளை, “இஸ்ரேலை புறக்கணிக்கவும்! இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு ("Boycott Israël" ou "Israël est un État terroriste !",) எனவும் அவர்கள் கோஷமிட தவறவில்லை.
**
பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில், இதுவரை காஸா பகுதியில் 9,500 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.