சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்த விராட் கோலி

5 கார்த்திகை 2023 ஞாயிறு 13:22 | பார்வைகள் : 7781
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு 327 ஓட்டங்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பலந்த வாய்ந்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 24 பந்துகளிலேயே 40 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
ஆனால் துரதிஷ்டவசமாக அரைசதம் கடப்பதற்குள் ரபாடா பந்துவீச்சில் ரோகித் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தார்.
இவரை தொடர்ந்து சுப்மன் கில் 23 ஓட்டங்களில் விக்கெட்டை பறி கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.
ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி அபாரமாக விளையாடினர். ஸ்ரேயாஸ் ஐயர் 77 ஓட்டங்கள் குவித்து இருந்த போது லுங்கி நிகிடி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆனால் நிலைத்து விளையாடிய விராட் கோலி 121 பந்துகளில் 10 பவுண்டரிகள் விளாசி 101 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இது அவருக்கு 49வது ஒருநாள் சதமாகும்.
இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 326 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சச்சின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் அடித்து அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் கொண்டு இருந்த நிலையில், அதனை தற்போது விராட் கோலி சமன் செய்துள்ளார்.
இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மூன்று முறையை சச்சின் இந்த சாதனையை சமன் செய்ய நூலிழையில் விராட் கோலி தவறவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025