Paristamil Navigation Paristamil advert login

RER C தொடருந்துடன் மோதி இளைஞன் பலி!

RER C தொடருந்துடன் மோதி இளைஞன் பலி!

5 கார்த்திகை 2023 ஞாயிறு 14:51 | பார்வைகள் : 8867


RER C தொடருந்துடன் மோதி இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இரவு 10.30 மணி அளவில் Musée d'Orsay டொடருந்து நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 21 வயதுடைய இளைஞன் ஒருவன் தண்டவாளத்தில் *இருந்த நிலையில், RER C தொடருந்து வந்து இளைஞனை மோதித்தள்ளியுள்ளது. 15 மீற்றர்கள் வரை இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிகிச்சைகள் அளித்த போதும் இளைஞனை காப்பாற்ற முடியவில்லை.

காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். தொடருந்து சாரதி மது பாவனை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவர் மது அருந்தியிருக்கவில்லை என தெரியவந்தது.

கண்காணிப்பு கமராக்களை ஆராய்ந்து வரும் காவல்துறையினர், தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்