ஜனாதிபதி மாளிகையின் காவலர்கள் மாற்றப்படும் நிகழ்வு! - பொதுமக்கள் பார்வையிட முடியும்!
5 கார்த்திகை 2023 ஞாயிறு 15:15 | பார்வைகள் : 4836
ஜனாதிபதி மாளிகையான எலிசேயின் பாதுகாவல்கள் மாற்றப்படும் நிகழ்வினை பொதுமக்கள் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டின் பின்னர் முதன்முறையாக இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எலிசே மாளிகையின் காவலாளிகள் மாற்றப்படும் நிகழ்வை ஒவ்வொரு மாதத்தின் முதலாவது செவ்வாய்க்கிழமையும் காலை 9 மணிக்கு எலிசே மாளிகையில் பார்வையிட முடியும். 16 வீரர்கள் கொண்ட இரு குழுக்கள் Palais de l'Elysée அரண்மனை முன்பாக அணிவகுப்பில் ஈடுபடுவார்கள். இராணுவ வீரர்கள் தங்களுக்கும் சல்யூட் பரிமாறிக்கொள்வார்கள்.
பின்னர் அவர்கள் கெளரவிக்கப்பட்டு பணியில் ஈடுபடுவார்கள்.
இந்த நிகழ்வினை ஒவ்வொரு மாதத்தின் முதலாவது செவ்வாய்க்கிழமைகளில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளதாக எலிசே மாளிகை அறிவித்துள்ளது.