Paristamil Navigation Paristamil advert login

காசாவில் சிக்கி உள்ள கனேடியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

 காசாவில் சிக்கி உள்ள கனேடியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

6 கார்த்திகை 2023 திங்கள் 07:12 | பார்வைகள் : 6591


இஸ்ரேல் காசா மீது பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் காசா பிராந்தியத்திலிருந்து வெளியேற கனடியர்கள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காசாவில் சிக்கியுள்ள கனேடியப் பிரஜைகளும் அவர்களது குடும்பத்தினரும் அங்கிருந்து வெளியேறுவற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

தங்களது பயண ஆவணங்கள் மற்றும் முக்கியமான பொருட்களை தம் வசம் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறுகிய அறிவிப்பின் அடிப்படையில் காசாவை விட்டு வெளியேறுவதற்கு தயாராக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


காசாவில் சுமார் 400 கனடியர்கள் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


ராஃபா வாயிலாக கனேடியப் பிரஜைகள் எகிப்து நோக்கி செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


 

வர்த்தக‌ விளம்பரங்கள்