மது, ஊழலை ஒழிக்க கவனம் செலுத்தலாம்: உதயநிதிக்கு ஐகோர்ட் அறிவுரை

6 கார்த்திகை 2023 திங்கள் 12:42 | பார்வைகள் : 9670
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காமல் போலீசார் கடமை தவறிவிட்டனர் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசியதன் விளைவாக தான், தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிளவு ஏற்படுத்தக் கூடிய எந்த கூட்டத்திற்கும் அனுமதி வழங்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காமல் போலீசார் கடமை தவறிவிட்டனர்.
அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சியில் பேசும்போது, மக்கள் இடையே ஜாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும். குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என்று பேசுபவர்கள் இதற்கு பதில் மது, போதைப்பொருள், ஊழலை ஒழிப்பதில் கவனம் செலுத்தலாம்
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025