ஓமப்பொடி
6 கார்த்திகை 2023 திங்கள் 11:36 | பார்வைகள் : 2707
மிகவும் சுலபமான முறையில் வீட்டில் இருக்கும் எளிதான பொருட்களை வைத்து மொறுமொறுவென ஓமப் பொடி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசிமாவு - கால் கிலோ
கடலைமாவு - 200 கிராம்
ஓமம் - 25 கிராம்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஓமத்தை ஊறவைத்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். அரிசிமாவு, கடலைமாவு, வெண்ணெய், உப்பு, அரைத்த ஓமவிழுது… இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து, ஓமப்பொடி அச்சில் மாவைப் போட்டுப் பிழிந்து எடுக்கவும்.
தீபாவளியன்று இது, ஓம்வாசனையுடன் மாலை நேர ஸ்நாக்ஸிற்கு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். மேலும் ஓமம் ஜீரணத்துக்கு மிகவும் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.