வயிற்று புற்றுநோய் ஏற்பட காரணம் என்ன..?
6 கார்த்திகை 2023 திங்கள் 11:53 | பார்வைகள் : 3503
வயிற்று புற்றுநோயின் தாக்கத்தை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் இதைத் தடுப்பதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கேஸ்ட்ரிக் கேன்சர் எனப்படும் வயிற்று புற்றுநோயானது பொதுவாக 50 அல்லது 60க்கு மேற்பட்ட வயதுகளில் வருகிறது. அதேசமயம், சில குறிப்பிட்ட காரணங்களாலும், மரபு ரீதியான பிரச்சினைகளாலும் இளம் வயதினருக்கும் கூட வயிற்று புற்றுநோய் ஏற்படும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
வயிற்று புற்றுநோயின் தாக்கத்தை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் இதைத் தடுப்பதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்பட வெவ்வேறு காரணங்கள் உள்ளன. மோசமான உணவுப் பழக்கம், அதிகப்படியாக உப்பு சேர்த்துக் கொள்ளுதல், புகை சூழ்ந்த இறைச்சி உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கின்றன.
இது மட்டுமல்லாமல் புகைப்பிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன் போன்ற காரணங்களாலும் வயிற்றுப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தனி நபர்களுக்கு, ஹெச். பைலோரி என்னும் தொற்று நாள்பட இருந்தால் அதன் காரணமாகவும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால், இந்தப் பிரச்சினைகளில் பெரிய அளவுக்கு தொடர்பு இல்லாத இளைஞர்களுக்கும் கூட வயிற்றுப் புற்றுநோய் ஏற்படுவதுதான் மிகவும் கவலைக்குரிய விஷயம் ஆகும். இளைஞர்களுக்கு இதுபோல ஏற்படுவது அரிதானது என்றாலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்ப பின்னணி கொண்டவர்கள், லின்ச் சிண்ட்ரோம் என்ற பிரச்சினை கொண்டவர்களுக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அறிகுறிகள் : வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளானது அவரவர் வயது மற்றும் பாதிப்பு தன்மை ஆகியவற்றை பொருத்து மாறுபடுகிறது. பொதுவாக வயிற்று வலி, அசௌகரியம், நீடித்த செரிமானமின்மை, உணவை விழுங்குவதில் சிரமம், திடீர் எடை இழப்பு, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படலாம். மலம் கருமை நிறத்தில் அல்லது அழுகிய வாடையுடன் வெளியேறுவதும் இதன் அறிகுறி ஆகும்.
.
குணப்படுத்த முடியுமா : நோயை எந்த அளவுக்கு முன்கூட்டியே கண்டறிகிறோமோ, அதற்கு ஏற்ப பயனுள்ள சிகிச்சையை எடுக்க முடியும். அதே சமயம், இளைஞர்களைப் பொருத்தவரையில் அவர்களுக்கான மரபணுவில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் இதற்கு தீர்வு காண்பது சவால் மிகுந்ததாக இருக்கும். பெரியவர்களைப் பொருத்தவரையில் பெரும்பாலும் நோய் முற்றிய நிலையில் தான் கண்டறியப்படுகிறது. இத்தகைய சூழலில், சிகிச்சை அளிப்பது கடினமானதாக இருக்கும்.
சிகிச்சை முறைகள் : ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமாக பாதிக்கப்பட்ட பகுதியை வெட்டி எடுப்பார்கள். இரண்டாம் நிலை அல்லது கொஞ்சம் மேம்பட்ட நிலையில் கண்டறியப்பட்டால் ஹீமோதெரஃபி சிகிச்சை அளிக்கலாம். அதனுடன் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாடும் செய்யப்படும். இறுதிகட்ட நிலையில் ஹீமோதெரஃபி, இமியூனோதெரஃபி போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.